Test

Parental Care Bill 2026 - As Introduced in the Rajya Sabha on 13th March, 2026

Parental Care Bill 2026 - As Introduced in the Rajya Sabha on 13th March, 2026

Download PDF 


In Tamil


அன்பார்ந்த தோழர்களே!


மத்திய அரசு ஊழியர்களுக்கு பெற்றோர் பராமரிப்பு விடுப்பு வழங்குதல் தொடர்பானா மசோதா தாக்கல்.


 பெற்றோர் பராமரிப்பு விடுப்பு மசோதா, 2026

2026 மார்ச் 13 அன்று மாநிலங்களவை முன் அறிமுகப்படுத்தப்பட்டது

மசோதா எண்: XXV / 2026.


இந்த மசோதா

மூத்த பெற்றோரின் மருத்துவம், உடல்நலம் மற்றும் நலன் தொடர்பான தேவைகளை கவனிக்க ஊழியர்களுக்கு பெற்றோர் பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும். 


இது பெற்றோர் பராமரிப்பு விடுப்பு சட்டம், 2026” என்று அழைக்கப்படும்.

இது மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் தேதியில் அமுலாகும்.


“பெற்றோர்”என்பது – 60 வயதுக்கு மேற்பட்ட தாய் /தந்தையர், தத்தெடுத்த, பராமரிப்பு பெற்றோர் அல்லது மாமியார்/மாமனார் அடங்குவர் .


ஒவ்வொரு ஊழியரும் சேவை காலத்தில் மொத்தமாக 45 நாட்கள் வரை விடுப்பு பெற உரிமையுடையவர்.

இது ஒரே தடவையாக அல்லது பல தவணைகளில் பெறலாம்.

இந்த விடுப்பு:

முழு சம்பளத்துடன் வழங்கப்படும்

வேறு விடுப்புகளிலிருந்து கழிக்கப்படாது

இது ஒருமுறை வழங்கப்படும் .இதை பணமாக மாற்ற முடியாது.


ஊழியர் விண்ணத்தோடு மருத்துவ சான்றிதழ் ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும்.

அவசரத்தில் முன் அனுமதி இல்லாமல் செல்லலாம்; 


7 நாட்களில் ஆவணங்கள் தர வேண்டும்.

விடுப்பு வழங்கும் அதிகாரி 48 மணி நேரத்தில் தீர்மானிக்க வேண்டும்.

மறுத்தால் காரணம் எழுதித் தெரிவிக்க வேண்டும்.


நோக்கங்கள் மற்றும் காரணங்கள் 

------––-–--------------–-------

இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது

குடும்ப அமைப்பு மாற்றம் (சேர்ந்த குடும்பம் குறைவு)

வேலைக்காக குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து தூரம்

“Sandwich Generation” (பெற்றோர் + குழந்தைகள் கவனிப்பு) அழுத்தம்

முதியோருக்கு அதிக நோய்கள்

பெற்றோர் பராமரிப்பு விடுப்பு சட்டம் இல்லை

இதனால்

மன அழுத்தம்

வேலை இழப்பு

குடும்ப சிக்கல்கள் ஏற்படுவது சாதாரனமாகிவிட்டது.


அரசியல் சட்டம் (Article 41) ன் படி

இந்திய கலாச்சாரம்:

“மாதா, பிதா தேவம்”

சர்வதேச நாடுகளின் முன்னுதாரணமாக கொண்டு வரையப்பட்டது.


பெற்றோர் பராமரிப்பு ஒரு சமூக பொறுப்பு என்பதை அங்கீகரிக்கிறது

வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை சமநிலையை உருவாக்குகிறது

முதியோருக்கு மரியாதையானப முன்வைத்தவர்:

சுமித்ரா பால்மிக், எம்.பி.

நன்றி


Post a Comment

0 Comments