விழிப்புணர்வு பதிவு:
சமீப பல சமூக பதிவுகளில் தபால் தலை வெளியீடு குறித்தும், My Stamp எனப்படும் குறித்தும் தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தெளிவுபடுத்தும் நோக்கில் ஒரு சிறிய முயற்சி.
My Stamp (தனிப்பட்ட அஞ்சல் தலை) – விளக்கம்
My Stamp என்பது இந்திய அஞ்சல் துறை வழங்கும் ஒரு சேவை. இதில் தனிநபர்கள், கல்வி நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் தாங்களே பணம் செலுத்தி, தங்களுக்கு விருப்பமான படம் அல்லது கருத்துடன் தனிப்பட்ட அஞ்சல் தலை உருவாக்கலாம். ₹300/- செலுத்தி யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் அஞ்சல் தலையில் நம் படத்தோடு பெற்றுக்கொள்ளலாம். நமது படம் அஞ்சல் தலையாக வராமல், உண்மையான அஞ்சல் தலையோடு ஒட்டி வரும்.
📮 என் அஞ்சல்தலை (My Stamp) – FAQ 📮
Q1. இது அரசு வெளியிட்ட அஞ்சல் தலையா?
❌ இல்லை.
இவை இந்திய அரசு அல்லது அஞ்சல் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அஞ்சல் தலைகள் அல்ல.
Q2. அப்படியானால் இவை என்ன அஞ்சல் தலைகள்?
✅ இவை தனிப்பட்ட (Personalised) அஞ்சல் தலைகள்.
நான் தனிப்பட்ட முறையில் பணம் செலுத்தி, அஞ்சல் துறை வழங்கும் சேவையின் மூலம் வடிவமைத்து உருவாக்கியவை.
Q3. அரசு அஞ்சல் தலைகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
🔹 அரசு அஞ்சல் தலைகள் – அரசு தேர்வு செய்து, தேசிய அளவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
🔹 இந்த அஞ்சல் தலைகள் – தனிநபர் முயற்சியாக, கருத்து பகிர்வுக்காக உருவாக்கப்பட்டவை.
Q4. இந்த முயற்சியின் நோக்கம் என்ன?
🎯 கல்வி, சமூக விழிப்புணர்வு, மொழி மற்றும் நல்ல மதிப்புகளை
அஞ்சல் தலைகள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லவே இந்த முயற்சி.
Q5. இந்த அஞ்சல் தலைகளை அஞ்சலுக்கு பயன்படுத்தலாமா?
✅ ஆம்.
அஞ்சல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு அஞ்சல்களில் பயன்படுத்தலாம்.
Q6. விற்பனைக்காகவா இந்த அஞ்சல் தலைகள்?
❌ இல்லை.
இது வணிக நோக்கமல்ல; கல்வி மற்றும் சமூக நோக்கமுடைய முயற்சி.
Q7. மாணவர்களுக்கு இதில் என்ன பயன்?
📚 அஞ்சல் தலை சேகரிப்பு
🎨 படைப்பாற்றல் வளர்ச்சி
🌍 சமூக விழிப்புணர்வு
📝 வரலாறு மற்றும் மொழி மீது ஆர்வம்
Q8. இது அரசு ஆதரவு பெற்ற முயற்சியா?
❌ இல்லை.
இது முழுமையாக தனிப்பட்ட முயற்சி.
தவறான புரிதல்கள் தவிர்க்க இந்த விளக்கம்.


0 Comments