செல்வமகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா / கணக்கு) Sukanya Samriddhi Account
இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் :
v மத்திய அரசு பெண் குழந்தைகளுக்காக அஞ்சலகம் மூலம் இந்த சிறப்பு சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
v 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் / காப்பாளர் உதவியுடன் சுகன்யா சம்ருத்தி கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் துவங்கலாம்
v ஒரு குழந்தைக்கு ஒரு கணக்குவீதம், ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகளுக்கு மட்டும்.
v இதற்கு கட்டாயமாக வாரிசு நியமன வசதி (Nomination)உண்டு..
v கணக்கு துவங்க முதல் தவணை குறைந்த பட்சம் ரூ 250, மற்றும் அதிகபட்ச முதலீடாக ரூ. 1,50,000/- வரை ஒரு நிதியாண்டில் சேமிக்கலாம்
v இந்த கணக்கில் ரூ.50-ன் மடங்காக எத்தனை முறை வேண்டுமானாலும், அனைத்து (CBS) அஞ்சலகங்களிலும் பணம் செலுத்தலாம். மேலும் தங்களது” நெட் பேங்க்” மூலமாகவும் பணம் செலுத்தும் வசதி உண்டு.
v இந்தக் கணக்கை இந்தியாவின் எந்த அஞ்சலகத்திற்கும் மாற்றிக் கொள்ளலாம்.
v தற்போதைய வட்டி விகிதம் 8.2%
v கணக்கு துவங்கிய நாள் முதல் 15ஆண்டுகள் வரை பணம் செலுத்த வேண்டும்.
v மேலும், கணக்கு வைத்திருக்கும் பெண்குழந்தையின் 18 வயது முடிந்த பின்,/ 10ம் வகுப்பிற்கு மேல் பயில கடந்தநிதி ஆண்டு இறுதியில் உள்ள இருப்புத்தொகையில் இருந்து அதிகபட்சமாக 50 சதவீதம் வரை ஒரு தவணையாகவோ அல்லது 5 தவணைகளாகவோ படிப்புக்காக பணம் எடுத்துக்கொள்ளலாம்.
v கணக்கு துவங்கி21 ஆண்டுகள் முடிந்த பின் கணக்கை முடித்து முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளலாம் அல்லது திருமணத்தின் போது கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
v மருத்துவச் செலவிற்காக கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொள்ளும் வசதி..
v செலுத்தும் தொகைக்கு வருமானவரி விலக்கு உண்டு ( 80-C IT Act 1961 )
தேவையான விபரங்கள் :
பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் &ஆதார், புகைப்படம்
பெற்றோர் / காப்பாளரின் புகைப்படம், ஆதார் & பான் கார்டு நகல்.
முதிர்வு தொகை :
செலுத்தும் தொகை மாதம்: ரூ 1000 வீதம் 15 வருடங்கள் ( 1000 x 12x 15 = 1,80,000 )வட்டி = 395000 மொத்தம் = 5,75,000 ( தோராயமாக )
மேலும் விவரங்களுக்கு & இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள அருகில் உள்ள அனைத்து அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம்

0 Comments