Test

Changes in the Registered Post / Speed Post w.e.f 01/10/2025 - பதிவு தபால் என்ற சேவை ரத்து & விரைவு அஞ்சல் சேவையில் மாற்றங்கள்

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!! அனைவருக்கும் வணக்கம்.


01.10.2025 முதல் நமது துறையில் பதிவு தபால் என்ற சேவை ரத்து செய்யப்படுகிறது.

சாதாரண தபால்களைத் தவிர கடிதப் போக்குவரத்துக்கு ( 500 கிராம் வரை) உள்நாட்டு விரைவு அஞ்சல் மூலம் மட்டுமே இனி 500 கிராம் எடையுள்ள தபால்களை அனுப்ப முடியும். (Speed post Document) 500 கிராம்க்கு மேல் எடை கொண்ட தபால்களை டாக்குமெண்ட் என்ற வகைப்பாட்டில் அனுப்ப முடியாது. பார்சல் என்ற வகைப்பாட்டின் கீழ் மட்டுமே அனுப்பும் முடியும்.


இதை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு எளிதாக அதனுடைய Speed Post Document கட்டணத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


பொதுவாக விரைவு தபால் Speed Post என்பது விலாசத்தில் உள்ள எவரிடமும் பட்டுவாடா செய்யப்படும். எனவே தபால்கள் விலாசதாரரிடம் மட்டுமே பட்டுவாடா செய்ய வேண்டிய அவசியத்தை கருதி மதிப்பு கூட்டப்பட்ட சேவையாக Value Added Service ஆக பதிவு Registration செய்யும் முறை அமல்படுத்தப்படுகிறது.

இதற்கு கட்டணமாக Speed Document / Parcel கட்டணத்துடன் கூடுதலாக ரூபாய் 5 செலுத்தப்பட வேண்டும். GST Extra . இவ்வாறு கூடுதலாக ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட்ட விரைவு தபால்களை விலாசதாரிடம் மட்டுமே வழங்க வேண்டும் அல்லது விலாசதாரருடைய உரிய அங்கீகாரம் பெற்ற நபரிடம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.


மிக முக்கியமான ஒரு குறிப்பு என்னவென்றால் இந்த பதிவு Registration சேவை என்பது Speed Post டாக்குமெண்ட் மற்றும் Speed Post பார்சல் இவைகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.


இரண்டாவது மதிப்பு கூட்டப்பட்ட சேவையாக விலாசதாரருடைய தொலைபேசி எண்ணிற்கு ஓடிபி OTP செலுத்தி அதன் மூலம் தபால் பட்டுவாடா செய்யும் முறையும் இன்று முதல் துவக்கப்படுகிறது. இதற்கென கூடுதல் கட்டணம் ஆக ரூபாய் 5 வசூலிக்கப்படும். GST Extra



எனவே இந்த இந்த கட்டண மாற்றங்கள் மட்டும் கூடுதல் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் 1.10.2025 முதல் அமலுக்கு வருகின்றன . இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது பதிவு அஞ்சல் Registered Post என்கின்ற சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நாம் கவுண்டரில் புக் செய்யும் போது இந்த சேவை காட்டப்படாது. இந்த மாற்றங்கள் அனைத்தும் உள்நாட்டு அஞ்சல் சேவைகளுக்கு மட்டுமே வெளிநாட்டு அஞ்சல் சேவை வழக்கம் போலவே தொடரும்.


புதிய கட்டண மாற்றம் என்பது ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பப்படும் டாக்குமென்ட்கள் அதாவது 500 கிராம் வரைக்கும் உள்ள ஸ்பீட் போஸ்ட் தபால்களுக்கு மட்டுமே பொருந்தும். 500 கிராம் எடைக்கு மேல் அனுப்புகின்ற ஸ்பீடு பார்சலுக்கு எவ்வித கட்டணம் மாற்றமும் செய்யப்படவில்லை.

 

Revision of Inland Speed Post Document Tariff W.e.f.  01/10/2025

DOP Order : https://www.saposts.com/2025/09/revision-of-inland-speed-post-document.html 

Post a Comment

0 Comments