அன்பார்ந்த தோழர்களே!!!
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான தபால்காரர்/மெயில்கார்டு/MTS ஊழியர்களின் பதவி உயர்வு தேர்வான LDCE Postal Assistant/ Sorting Assistant of அறிவிப்பு:-
அஞ்சல் இயக்குனரக உத்தரவுபடி தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2025 ஆண்டிற்க்கான தபால்காரர்/மெயில்கார்டு/MTS ஊழியர்களுக்கான LDCE Postal Assistant/ Sorting Assistant தேர்வு அறிவிப்பு 09.06.2025 ல் வெளியிடப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்திற்கு சென்று சேர வேண்டிய கடைசி நாள்:- 02.07.2025.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்கப்படும் நாள்:- 14.07.2025
LDCE Postal Assistant/ Sorting Assistant தேர்வு நாள்:- 20.07.2025
Postal Assistant/ Sorting Assistant தற்காலிக காலிபணியிடங்கள்
PA(PO)- UR -123 , ST-34 Total - 157
SA - UR- 36 SC - 6 ST -3 Total -45
Total UR - 159 SC-6 ST - 37 Total- 202
மண்டல தலைமையிடங்களில் LDCE PA/SAதேர்வு நடைபெறும்.
DEST தேர்வு தனியாக நடத்தப்படும்.
Department of Posts Postal Assistant/ Sorting Assistant Recruitment Rules 2022 "மத்திய அரசிதழில் 17.06.2022 ல் வெளியிடப்பட்ட புதிய தேர்வு விதிமுறைகள் மற்றும் அவ்வப்போது வெளியிடப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் LDCE Postal Assistant/ Sorting Assistant தேர்வு நடைபெறும்.
கீழ்க்கண்ட ஊழியர்கள் தேர்வு எழுத தகுதி உடையவர்கள்.
Category A:-
01.01.2025 அன்றோ அல்லது அதற்கு முன்போ மூன்று ஆண்டுகள் பணி முடித்த POSTMAN/MAILGUARD
01.01.2025 அன்றோ அல்லது அதற்கு முன்போ ஐந்து ஆண்டுகள் பணி முடித்த MTS ஊழியர்கள்
01.01.2025 அன்றோ அல்லது அதற்கு முன்போ MTS, POSTMAN/MAILGUARD ஆகிய கேடர்களில் ஒட்டுமொத்தமாக 5 ஆண்டுகள் பணி முடித்த POSTMAN/MAILGUARD.
Category B :-
17.06.2022க்கு முன் GDS ஊழியராக பணியாற்றி POSTMAN/ MAILGUARD/MTS ஆக பணியில் சேர்ந்து 01.01.2025 அன்று GDS சேவையையும் சேர்த்து 5 ஆண்டுகள் பணிகாலம் முடித்த POSTMAN/MAILGUARD /MTS ஊழியர்கள்.
GDS ஊழியராக பணியாற்றி POSTMAN/ MAILGUARD/MTS ஆக பணியில் சேர்ந்து 01.01.2025 அன்று GDS சேவையையும் சேர்த்து 8 ஆண்டுகள் பணிகாலம் முடித்த POSTMAN/MAILGUARD /MTS ஊழியர்கள்.
அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு தமிழ்நாடு வட்ட அளவில் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும். Postal Assistant/ Sorting Assistant பதவிகள் வட்ட அளவிலான பதவிகள் என்பதால் காலியிடங்களுக்கு ஏற்ப ஊழியர்கள் கொடுத்த விருப்ப முன்னுரிமை அளித்த கோட்டங்களில் காலியிடங்கள் இருப்பின் அதன் அடிப்படையில் கோட்டங்கள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
முதலில் Category A உள்ள ஊழியர்களுக்கு Postal Assistant/ Sorting Assistant காலியிடங்கள் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும். Category A மூலம் பூர்த்தி செய்யப்படாத Postal Assistant/ Sorting Assistant காலியிடங்கள் Category B ஊழியர்கள் மூலம் பூர்த்தி செய்யப்படும்.
தோழர்கள், தோழியர்கள் நன்கு படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
0 Comments